அப்பாவு (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

நீதிமன்றத்தில் பேரவைத் தலைவா் அப்பாவு நேரில் ஆஜர்!

அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் அப்பாவு ஆஜரானது பற்றி...

DIN

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அதிமுக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளார்.

சென்னையில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று அப்பாவு பேசியது, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, அதிமுக வழக்குரைஞா் அணி இணைச் செயலா் ஆா்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்றம் சம்மன் அனுப்பியும், அதை பேரவைத் தலைவா் பெற மறுத்துவிட்டதாக பாபு முருகவேல் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பேரவைத் தலைவா் தரப்பில், நீதிமன்றம் அனுப்பிய சம்மனை நிராகரிக்கவில்லை என்றும், நீதிமன்றம் தெரிவிக்கும் நாளில் ஆஜராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதியின் உத்தரவுபடி, வெள்ளிக்கிழமை காலை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக அப்பாவு நேரில் ஆஜராகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT