வணங்கான் படத் தலைப்பு விவகாரத்தில் இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தலைப்பு விவகாரத்தில் இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வணங்கான் படத் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, படத்தின் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. தொடக்கத்தில் இதில் சூர்யா நடிக்கவிருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இதிலிருந்து விலகிய சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.