முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு! din
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு!

முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் சந்திப்பு பற்றி...

DIN

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி நடந்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில், விசிக மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மது ஒழிப்பு மாநாடு

கள்ளக்குறிச்சியில் அக்.2-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படவுள்ளதாக அந்த கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

பின்னர், செய்தியாளா்களுடனான சந்திப்பின் போது, மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தது. தற்போது மதுவிலக்கை அமல்படுத்த அரசு என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. மதுபானக் கடைகளை மூட அரசு காலக்கெடுவை நிா்ணயம் செய்ய வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்.

மது ஒழிப்பு மாநாட்டில் ஜாதி, மதவாத சக்திகளைத் தவிர அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கலாம் என்றார்.

மேலும், அவரது சமூகவலைதளப் பக்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது தொடா்பாக அவா் பேசிய விடியோ வெளியிடப்பட்டு, பின் நீக்கப்பட்டது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகிய நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பியுள்ள முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடக்கு மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

சரித்திரப் பதிவேடு குற்றவாளி மாநகர எல்லைக்குள் நுழைய ஓராண்டு தடை

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT