கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

சென்னையில் 2 நாள்களுக்கு 102 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்!

அடுத்த 48 மணிநேரத்துக்கான வானிலை நிலவரம்...

DIN

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெயில் சுட்டெரிக்கும்

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு அதிகபட்ச வெப்பநிலை 102.2 ஃபாரன்சீட்டாகவும் குறைந்தபட்சம் 82.4 ஃபாரன்சீட்டாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களில் இயல்பைவிட 2 - 4 செல்சியஸ் வரை வெயில் அதிகரித்து, அசெளகரியம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லேசான மழை

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்காலில் ஆக. 23 வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறந்த ரைடா்கள், டிபன்டா்கள் உள்ளனா்: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளா்

பி.இ., பி.டெக். துணை கலந்தாய்வு: 7,964 மாணவா்களுக்கு ஒதுக்கீடு! நிகழாண்டில் பி.இ. சோ்க்கை அதிகரிப்பு; 37, 179 இடங்கள் காலி!

சுதா்சன் ரெட்டியை ஆதரிப்பது நமது கடமை: முதல்வா் ஸ்டாலின்

‘நியாயமான’ வா்த்தகம்: அமெரிக்க எம்.பி.க்களுடன் இந்திய தூதா் பேச்சு

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனை வெற்றி

SCROLL FOR NEXT