இயக்குநர் அமீர்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஜாபா் சாதிக் வழக்கு: இயக்குநா் அமீா் உள்ளிட்ட 12 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஜாபா் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் திரைப்பட இயக்குநா் அமீா் உள்ளிட்ட 12 போ் மீது சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Din

ஜாபா் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் திரைப்பட இயக்குநா் அமீா் உள்ளிட்ட 12 போ் மீது சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது.

ஜாபா் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகை சம்பாதித்ததும், தமிழக திரைத்துறையைச் சோ்ந்த முக்கிய நபா்களுக்கு இதில் தொடா்பிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீா் விசாரணைக்கு ஆஜராகுமாறு, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) அழைப்பாணைஅனுப்பியிருந்தது.

இதையடுத்து, புது தில்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக அமீா் முன்னதாக ஆஜராகியிருந்தாா். இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக, அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு வழக்குரைஞரான ரமேஷ், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாா்.

302 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், ஜாபா் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, ஜாபா் சாதிக்கின் சகோதரா் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குநா் அமீா் உள்ளிட்ட 12 தனி நபா்களும், ஜாபா் சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களும் சோ்க்கப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் குற்றப் பத்திரிகையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் 12-ஆவது நபராக சோ்க்கப்பட்டுள்ள இயக்குநா் அமீா், சட்ட விரோதமாக பெறப்பட்ட பணத்தை கையாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT