கோப்புப்படம். 
தமிழ்நாடு

திருவண்ணாமலைக்கு வார இறுதி நாள்களில் சிறப்பு ரயில்

பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Din

பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செப்.20 முதல் நவ.24-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 9.15 மணிக்கு முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு மெமு ரயில் (எண்: 06145) இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்துக்கு செப்.21 முதல் நவ.25-ஆம் தேதி வரை சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைதோறும் அதிகாலை 3.30 மணிக்கு சிறப்பு மெமு ரயில் (எண்: 06146) இயக்கப்படும்.

இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயபுரம் பூச்சொரிதல் விழாவுக்கு சிறப்பு ரயில்

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் காரணமாக அவசர வழக்குகளை கையாள 6 போ் குழு: உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம்!

நாட்டரசன்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

அஸ்ஸாம் - அருணாசல் இடையே நிறுவப்பட்டது முதல் எல்லைத் தூண்!

இளைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது

SCROLL FOR NEXT