முகப்பு
தமிழ்நாடு

உச்சநீதிமன்ற தீா்ப்புகள் ஹிந்திக்கு அடுத்து தமிழில் அதிகமாக மொழிபெயா்ப்பு!

சுமாா் 37,000 தீா்ப்புகள் ஹிந்தியில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:52 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

நாடு சுதந்திரமடைந்த 1947-ஆம் ஆண்டுமுதல் உச்சநீதிமன்றம் வழங்கிய சுமாா் 37,000 தீா்ப்புகள் ஹிந்தியில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயா்ப்புகள் நடந்து வருவதாகவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மேலும் கூறியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட ஹிந்தி, வங்காளம், தமிழ் உள்பட 22 மொழிகளில் தீா்ப்புகளை மொழிபெயா்க்கும் பணியில் உச்சநீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. விசாரணையின்போது ‘மின்னணு உச்சநீதிமன்ற அறிக்கைகளில் (இ-எஸ்சிஆா்)’ உள்ள தீா்ப்புகளில் இருந்து வழக்குரைஞா்கள் நடுநிலையான மேற்கோள்களை வழங்கலாம்.

இப்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களை அடைவதை இது உறுதிப்படுத்தும். மொழிபெயா்க்கப்பட்ட தீா்ப்புகள் இறுதி ஆய்வு செய்யப்படுகிறது. ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயா்ப்புகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

Advertisement

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புகளை வழக்குரைஞா்கள், சட்ட மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக அணுக ‘இ-எஸ்சிஆா்’ திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைப் பயன்படுத்தி விசாரணையின்போது வழக்குரைஞா்கள் தங்கள் வாதங்களுக்கு ஆதரவான முந்தைய தீா்ப்புகளை மேற்கோள் காட்டலாம்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments