பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில் 
தமிழ்நாடு

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்? - தமிழக அரசு விளக்கம்!

பழனி பஞ்சாமிர்தம் செய்யப் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக பரவும் செய்தி உண்மையல்ல என்று தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

DIN

பழனி பஞ்சாமிர்தம் செய்யப் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக பரவும் செய்தி உண்மையல்ல என்று தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் இது கலக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

திருப்பதி கோயிலுக்கு ஏ.ஆர். புட்ஸ் என்ற நிறுவனம் நெய் வழங்கிய நிலையில், தமிழகத்தில் புகழ்பெற்ற பழனி கோயிலுக்கும் இந்த நிறுவனம் நெய் வழங்கியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதனால் பழனி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் இந்த நெய் கலக்கப்பட்டுள்ளதாக பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு இதற்கு விளக்கம் தெரிவித்துள்ளது.

'பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடமிருந்தே பெறப்படுகிறது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது' என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT