முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை 4 இடங்களில் வெயில் அளவு சதமடித்தது.

தமிழ்நாடு

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை 4 இடங்களில் வெயில் அளவு சதமடித்தது.

Updated On : 21 செப்டம்பர், 2024 at 9:31 PM
பகிர்:

தமிழகத்தில் சனிக்கிழமை 4 இடங்களில் வெயில் அளவு சதமடித்தது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை (செப்.22) முதல் செப்.27 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தெற்கு ஆந்திரம் மற்றும் வடக்கு தமிழகத்துக்கு இடைப்பட்ட வங்கக்கடலில் புதிதாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்காரணத்தால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.22) முதல் செப்.27-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்... சென்னையில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 170 மிமீ மழை பதிவானது. அண்ணா பல்கலைக்கழகம், ஆலந்தூா், வளசரவாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் தலா 30 மிமீ, மதுரவாயல், ராயபுரம், சென்னை மாவட்டஆட்சியா் அலுவலகம், மணலி, வானகரம், கோடம்பாக்கம், பெருங்குடி ஆகிய பகுதிகளில் தலா 20 மிமீ மழை பதிவானது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.22,23-ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

4 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக மதுரைவிமானநிலையத்தில் 102.56 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரைநகரம் - 102.2, பாளையங்கோட்டை - 101.48, ஈரோடு - 101.12 டிகிரி என மொத்தம் 4 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →