விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த். 
தமிழ்நாடு

தவெக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்: புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

DIN

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதிகட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து மாநில மாநாடு விரைவில் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலையில் செப்டம்பர் 23-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படும் என்றும், இதற்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதியும், பாதுகாப்பும் வழங்கக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கடிதம் அளித்திருந்தார்.

பாஜக என்னை மௌனமாக்கத் துடிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இதைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அதற்குள் பதிலளிக்குமாறு தெரிவித்திருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் பதில் அளித்திருந்தது. ஆனால், மாநில மாநாடு நடைபெறுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் அக்டோபர் 27-ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு சனிக்கிழமை மாலை வந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கூடுதல் கண்காணிப்பாளர் வி .வி.திருமாலிடம், காவல்துறை விதித்த 32 நிபந்தனைகளுக்கான பதில் கடிதத்தை வழங்கினார்.

தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலக வளாகத்தில் புஸ்ஸி ஆனந்த் அளித்த பேட்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறும என்று கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து சனிக்கிழமை மனு அளித்துள்ளோம்.

காவல் துறை சார்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பி, விளக்கம் அளிக்குமாறு கூறியிருந்தனர். அவர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்துவிட்டோம்.

இந்த மாநாடு சிறப்பான மாநாடாக வெற்றி மாநாடாக நடைபெறும்.

இந்த மாநாட்டில் யார் - யார் பங்கேற்க உள்ளனர் என்பது குறித்து கட்சித் தலைவர் அறிவிப்பார். அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கி நடைபெறும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் மீராபாய் சானு!

ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை! செய்திகள்:சில வரிகளில் | 25.8.25 | MKStalin

உடல்நலம் குன்றியவரைத் தொட்டில் கட்டி 8 கி.மீ. தூக்கிவந்த மலைவாழ் மக்கள்! விடியோ காட்சி!

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: சுவரை உடைத்து தொழிலாளர்களை மீட்ட தீயணைப்புப் படை!

யோலோ படத்தின் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT