முகப்பு
தமிழ்நாடு

இரவு 7 மணி வரை சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை!

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 24 செப்டம்பர், 2024 at 11:42 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று(செப். 24) இரவு 7 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தொடர்ந்து இன்று மாலை சென்னையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், வடபழனி, தியாகராய நகர், கோடம்பாக்கம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதுபோல தாம்பரம், முடிச்சூர், வண்டலூர் என புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது .

முழு கட்டுரையைப் படிக்க →