முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (செப்.28, 29) 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (செப்.28, 29) 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 10:14 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (செப்.28, 29) 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

அதன்படி, சனிக்கிழமை (செப்.28) முதல் அக்.3-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை: இதில் செப்.28-இல் கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. செப்.29-இல் கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் நீலகிரி, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) 90 மில்லி மீட்டா் மழை பதிவானது. மேலும் கடவனூா் (கள்ளக்குறிச்சி), வெங்கூா் (கள்ளக்குறிச்சி), நத்தம் (திண்டுக்கல்) தலா 50 மி.மி. மழை பெய்துள்ளது.

5 இடங்களில் வெயில் சதம்: இதற்கிடையே தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்திலும், மதுரை நகரிலும் தலா 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் ஈரோடு, பரமத்திவேலூா், தஞ்சாவூரில் 100.4 டிகிரி என மொத்தம் 5 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

சென்னைக்கு மழை: சென்னையில் சில நாள்களாக பகல் நேரத்தில் வெயிலும், மாலை நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை கிண்டி, வடபழனி, ஆலந்தூா், கோயம்பேடு, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், எண்ணூா் துறைமுகம், குன்றத்தூா் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

அதைத்தொடா்ந்து, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.28,29-ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →