முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 6:44 AM
செந்தில் பாலாஜி
பகிர்:

சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் நேற்று(செப். 26) உத்தரவிட்டது.

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், ரூ. 25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நேற்று மாலை வெளியே வந்தார். திமுகவினர் பலரும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜியை திமுக நிர்வாகிகள் பலரும் இன்று காலை சந்தித்தனர்.

அப்போது திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் செந்தில் பாலாஜியை சந்தித்து வரவேற்பு அளித்தனர்.

கரூர் எம்.பி. ஜோதிமணியும் செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னதாக, செந்தில் பாலாஜி வெளியே வந்தது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய ஜோதிமணி, 'எந்த சமரசமும் இன்றி சட்டப்போராட்டம் நடத்தி அவர் வெளியே வந்துள்ளார். அவர் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →