சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் தாமதம் -பயணிகள் அவதி!
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
சென்னை : செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
ரயில்கள் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிக்கு செல்ல இயலவில்லை என பயணிகள் வேதனை தெரிவித்தனர். இதனிடையே ரயில் நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
செங்கல்பட்டிலிருந்து புறப்படும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறால் நிறுத்தப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் 20 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற குறைபாடுகளை ரயில்வே துறை விரைந்து சரிசெய்து பயணிகளின் அசௌகரியத்தை தவிர்க்க ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.