முகப்பு
தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை குறைவு: எவ்வளவு?

சென்னையில் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 4.50 குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 4.50 குறைக்கப்பட்டுள்ளது.

சா்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

இருந்தபோதும், வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தொடா்ந்து ரூ. 918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் ஜனவரி 1(திங்கள்கிழமை) வெளியிட்ட விலை நிலவரம் குறித்த அறிவிக்கையில், “உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகள் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சிலிண்டா் விலை  ரூ. 4.50 குறைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் ரூ. 1,929-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டரில் விலை ரூ.1,924.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தில்லியில் ரூ.1,755.50 மற்றும் மும்பையில் ரூ.1,708.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கொல்கத்தாவில் மட்டும் 50 பைசா உயர்த்தப்பட்டு ரூ.1,869-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.