தமிழ்நாடு

கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்

கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக...

DIN

பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணைக் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

சனி, ஞாயிறு மற்றும் ரமலான் பண்டிகையால் திங்கள்கிழமை வரை பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், பேரவை இன்று (ஏப்.1) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது.

கேள்வி நேரத்தின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேசுகையில், ”கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணைக் கட்டப்படும். ரூ. 6.50 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயாராக உள்ளது.

சின்னமுட்டலுவில் 12 மீ வரை பூமியில் கூழாங்கல் கலந்த மண் உள்ளது. சிதைவுற்ற மணலும் காணப்படுவதால் நீர்தேக்கம் அமையும் சாத்தியக்கூறுகள் இல்லை” என்றார்

மேலும், காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அதிமுக உறுப்பினா் சி.விஜயபாஸ்கா் அளித்த கவன ஈா்ப்பு மீது விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பதிலளிக்கவுள்ளாா்.

இதையும் படிக்க: வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT