அடுத்தடுத்த விபத்தில் சிக்கிய கார் - சரக்கு ஆட்டோ 
தமிழ்நாடு

விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி - கார் அடுத்தடுத்து மோதல்!

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி - கார் அடுத்தடுத்து மோதல்..

DIN

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரேக் டவுனாகி நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது அடுத்தடுத்து பின்னால் வந்த கார், ஆம்னி பேருந்து, ஆட்டோ மோதியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 43 பயணிகளுடன் விராலிமலை வழியாக சென்னை நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராசநாயக்கன்பட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது.

விபத்தில் சேதமடைந்த ஆம்னி பேருந்து..

இந்த நிலையில் ஏற்கனவே சாலையோரம் மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற ஆட்டோ ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்ததை அறியாத பின்னால் வந்த கார், அந்த சரக்கு ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்து நேரிட்டதை சற்றும் அறியாத பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டோ பின்னால் மோதி நின்ற கார் மீதே மோதியுள்ளார்.

இந்த விபத்தில் பேருந்து பயணிகள் 43 பேர் சிறய காயங்களுடன் தப்பினர். மேலும், ஆட்டோவில் பயணம் செய்தோர், காரில் வந்தோர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி நின்றதால் நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் காயம் இல்லை. கார் அப்பளம் போல் நொறுங்கிய இந்த விபத்தில், யாருக்கு, உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

அப்பளம் போல நொறுங்கிய கார்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT