சிசிவிடி காட்சி 
தமிழ்நாடு

மருதமலை கோயிலில் வெள்ளிவேல் திருட்டா? நிர்வாகம் மறுப்பு!

மருதமலை முருகன் கோயிலில் வெள்ளிவேல் திருடப்படவில்லை என கோயில் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

DIN

கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழக்கு நடைபெறவிருக்கும் நிலையில், வெள்ளிவேல் திருடப்பட்டதாக வெளியாகும் செய்திகளுக்கு கோயில் நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மருதமலை முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருடப்பட்டதாகவும், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியிருப்பதாகத் தகவல்கள் வந்தன்.

இந்த நிலையில், கோவை மண்டல இணை ஆணையர் ப. ரமேஷ் வெளியிட்டிருக்கும் மறுப்புச் செய்தியில்,

கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழக்கு நடைபெறவிருக்கும் நிலையில், ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருடப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ, 100 கிராம் எடையுள்ள வெள்ளிவேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது.

இது தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம். இதன் நிர்வாகியாக குருநாதசாமி என்பவர் இருந்து வருகிறார். இந்த தியான மண்டபத்தில் வெள்ளிவேல் மட்டுமே இருந்து தியானம் செய்யப்பட்டு வந்துள்ளது.

மேற்கண்ட தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை. மேலும் இந்த சம்பவம் மருதமலை முருகன் கோயிலில் நடைபெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT