சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி 
தமிழ்நாடு

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள்: அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவிப்பு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழகத்தில் 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தாா்.

Din

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழகத்தில் 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் சட்டம், சிறைச்சாலைகள் துறை மானிய கோரிக்கைகள் மீது வெள்ளிக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

அரசு சட்டக் கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்களுக்கு ஆசிரியா் மேம்பாட்டு திட்டப் பயிற்சி அளிக்கப்படும். சட்டக்கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில், அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயா்க்கப்படுவதுடன், கல்லூரிகளில் திறன் வகுப்பறைகளும், மின் நூலகமும் அமைக்கப்படும்.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அயல்நாட்டு சட்டப் பல்கலைக்கழகங்களுடன் மாணவா் பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிய நீதிமன்றங்கள்: குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதாவது, சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருப்பூா், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், நாமக்கல், திருவாரூா், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் மூன்று கட்டங்களாக ஏற்படுத்தப்படும்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாா்பு நீதிமன்றமும், திருவள்ளூா் மாவட்டம் ஆவடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றமும், கடலூா் ஸ்ரீமுஷ்ணத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றமும் புதிதாக ஏற்படுத்தப்படும். இத்துடன், திருச்சியில் கூடுதலாக குடும்பநல நீதிமன்றம் உருவாக்கப்படும் என்று அறிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 2 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு

கழுகுமலை கோயில் கிரிவலப் பாதையில் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல்

தூத்துக்குடியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

எட்டயபுரம் அருகே விபத்தில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT