தமிழ்நாடு

உதகைக்கு புதிய பாதை: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

உதகைக்கு மூன்றாவது பாதை திறப்பு.

DIN

உதகைக்கான மூன்றாவது பாதையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

காட்டேரியிலிருந்து மஞ்சூர் வழியாக உதகைக்குச் செல்லும் புதிய பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப். 6) திறந்து வைத்தார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக குன்னூர் செல்லாமல் நேரடியாக உதகைக்குச் செல்லும் வகையில் இந்த புதிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதைத் தொடா்ந்து, ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடக்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

முதல்வரின் வருகையையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதையடுத்து, வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழாவில் கின்னஸ் சாதனை புரிந்த 10 ஆயிரம் மகளிருக்கு மாலை 6 மணிக்கு கோவை, கொடிசியாவில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். இரவு 7.20 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்குத் திரும்புகிறாா்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT