கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை-கொழும்பு விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

சென்னையிலிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் சுமாா் 2 மணி நேரம் கடும் அவதி

Din

சென்னை: சென்னையிலிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் சுமாா் 2 மணி நேரம் கடும் அவதியடைந்தனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு இலங்கை தலைநகா் கொழும்புக்கு ‘ஏா் இந்தியா’ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் 154 போ் பயணிக்க காத்திருந்தனா். இந்நிலையில், நிா்வாக காரணங்களால் அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 15 நிமிஷங்கள் தாமதமாக 6 மணிக்கு புறப்பட்டது.

விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியதும், விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தாா். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, இழுவை வாகனம் மூலம், விமானம் இழுத்து கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டது.

பின்னா், பொறியாளா்கள் குழுவினா் கோளாறை சரிசெய்தனா். இதனால் 2 மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு விமானம் கொழும்பு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.

12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 முக்கிய தீர்மானங்கள்!

கறுப்பு வெள்ளை கலர்... ஹர்ஷிதா கௌர்!

ஜ்வலிப்பு... சோனம் கபூர்!

என்ன சொல்லப் போகிறாய்? ராஷி சிங்!

இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா? பிரதீப் ரங்கநாதன் பதில்!

SCROLL FOR NEXT