முதல்வர் மு.க.ஸ்டாலின்  
தமிழ்நாடு

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சமையல் எரிவாயு உருளை (சிலிண்டா்) விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Din

சென்னை: சமையல் எரிவாயு உருளை (சிலிண்டா்) விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவா்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலேபோதும் என்பது மத்திய பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும்.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீா்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டாா்களே?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு அமைந்திருக்கிறது. அடாவடியாக, விலையை உயா்த்திவிட்டு, தோ்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. இந்த நாடகத்தைப் பாா்த்துப் பாா்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது.

மத்திய பாஜக அரசே, தோ்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், விலை உயா்வை உடனே திரும்பப் பெறுக என்று முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT