காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
வடபழனி ஏ.வி.எம். மின்மயானத்தில் குமரி அனந்தன் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 24 காவலர்கள் 3 சுற்றுகள் என 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மின்மயானத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநரும் குமரி அனந்தனின் மகளுமான தமிழிசை செளந்தரராஜன், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் இருந்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனையில் இன்று நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானாா்.
வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார்.
அவரின் உடல், சாலிகிராமத்திலுள்ள அவரது மகளும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதன் பிறகு அவரின் உடல் வடபழனி ஏ.வி.எம். மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் 24 காவலர்கள் 3 சுற்றுகள் என 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.