ANI
தமிழ்நாடு

வட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்

DIN

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,

"ரயலசீமா/கர்நாடகத்தின் உள்புறப் பகுதிகளின் வடமேற்கிலிருந்து வரும் வறண்ட காற்று, தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை(மேற்கு உள்புறம்), திருவள்ளூர் மாவட்டங்களை வந்தடையும். இதனால் இப்பகுதிகளில் அடுத்த 4 - 5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமை(ஏப். 11, 12) மிகவும் வெப்பமாக இருக்கும்.

சென்னை மீனம்பாக்கம் இந்த ஆண்டில் முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸை பதிவு செய்யக் கூடும். வேலூரில் 41+ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்

SCROLL FOR NEXT