எஸ்.ராமகிருஷ்ணன். 
தமிழ்நாடு

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு, பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதான பாரதிய பாஷா விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ். ராமகிருஷ்ணன் தனது ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக 2018 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

ஞானவாணி விருது, தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், பிரெஞ்சு, ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன.

வருகிற மே 1 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள விழாவில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்படவுள்ளதாக பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத் அறிவித்துள்ளது. இந்த விருதைப் பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது.

இதையும் படிக்க: அலுவலகங்களில் இளம் தலைமுறையினரிடம் ஜாக்கிரதை! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT