முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் பொன்முடி.  கோப்புப்படம்.
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்தித்துப் பேசினார்.

DIN

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்தித்துப் பேசினார்.

கடந்த ஏப். 6 ஆம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாது என்று குறிப்பிட்டு பெண்கள் பற்றி கொச்சையான கருத்துகளைக் கூறியிருந்தார். அவர் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

மேலும் திமுக எம்.பி. கனிமொழியும் பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச் செயலர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அருண் நேருவிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல்! - அமலாக்கத்துறை

அவருக்குப் பதிலாக அப்பதவியில் எம்.பி. திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு கட்சியின் மூத்த தலைவர்களிடையே சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

திமுக துணைப் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் முதல்வரை அமைச்சர் பொன்முடி சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT