கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி நொண்டி முனியாண்டவர் கோயில் ஜல்லிக்கட்டு விழா இன்று(சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள நொண்டி முனியாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு ஜல்லிக்கட்டு விழாவிற்கு கோட்டாட்சியர் ஐஸ்வர்யா தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலை வகித்து கொடியசைத்து ஜல்லிக்கட்டினை தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 700 காளைகளும், காளைகளை அடக்க 250 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர்.
மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்லா தலைமையில் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் கோ. சுகுமார் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சட்டப்பேர உறுப்பினர் மா. சின்னதுரை, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் எம். பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் மா. தமிழய்யா, வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.