பாமக தலைவர் ராமதாஸ் 
தமிழ்நாடு

முடிவில் மாற்றமில்லை; யாரும் சந்திக்க வர வேண்டாம்: ராமதாஸ்!

எடுத்த முடிவில் மாற்றமில்லை, என்னைச் சந்திக்க யாரும் வர வேண்டாம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

DIN

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, இனி நானே தலைவர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், தனது முடிவில் மாற்றமில்லை, என்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

பாமக கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் தனிப்பட்ட முறையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்த பாமக, படுதோல்வியை சந்தித்த நிலையில், தேர்தல் கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அடுத்த தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும்போது குட்சிக்குள் சிக்கல் ஏற்படக் கூடாது என எண்ணியே, தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு இனி நானே தலைவர் என அறிவித்துவிட்டார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸை சமாதானப்படுத்தும் முயற்சியில், கட்சியின் மூத்த தலைவர்களும், குடும்ப உறுப்பினர்களும் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். ஆனாலும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்காத நிலையில், ராமதாஸ் மகள், இதில் தலையிட்டு சமரசத் தீர்வு காண முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தைலாபுரம் இல்லத்தில் 3-வது நாளாக தொடரும் சமரச பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில, தனது முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும், பாமக தலைவர் விவகாரம் குறித்துப் பேச யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த திக்வேஷ் ரதி: சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ராணா!

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்!

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

SCROLL FOR NEXT