பேரவையில் அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
சட்டப்பேரவை இன்று (ஏப்.17) காலை 9.30 மணிக்குக் கூடியது. அதன்பிறகு, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றுக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.ராஜேந்திரன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே, கேள்வி கேட்பவர்களை அமைச்சர் சேகர் பாபு ஒருமையில் பேசுவதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.