இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்!
சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக...
சிறையிலுள்ள விசாரணைக் கைதிகளின் நெருங்கிய உறவினர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கையை வெளியிட தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாயின் இறுதிச் சடங்களில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரருக்கு விடுப்பு வழங்கக் கோரி சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, ”தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ள நிலையில், விசாரணைக் கைதிகள் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
மேலும், சிறையிலுள்ள விசாரணைக் கைதிகளின் நெருங்கிய உறவினர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் சுற்றறிக்கையை தமிழக உள்துறை செயலாளர் வெளியிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க: 'திருமணமாகி 10 மாதம் கழித்துதான் குழந்தை பிறக்கும்' - திமுக எம்.பி. சர்ச்சைப் பேச்சு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.