கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனை. 
தமிழ்நாடு

ஈஸ்டர் திருநாள்: கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனை தொடர்பாக...

DIN

ஈஸ்டர் திருநாள் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் நாள் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று(ஏப். 20) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேவாலயங்களில் நள்ளிரவில் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் ஆதித்தூதர் பேராலயத்தில் பேராயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் ஈஸ்டர் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது இயேசு கிறிஸ்துவின் 33 ஆண்டுகால வாழ்க்கை, அதில் இயேசு கிறிஸ்து போதித்தக் கருத்துகள், இயேசு கிறிஸ்து அனுபவித்த சித்தரவதைகள் மற்றும் இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்வுகள் ஆகியவை குறித்து தாமஸ் அக்வினாஸ் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு கண்களை மூடி இயேசு கிறிஸ்துவை பிரார்த்தித்தனர்.

இதையும் படிக்க: அமெரிக்காவில் ராகுல் காந்தி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT