தமிழ்நாடு

ரயில்களில் காவி நிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்

வந்தே பாரத் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு பற்றி மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதிவு...

DIN

காவிநிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்

வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி பெட்டி, சாதாரண ரயில்களின் முன்பகுதி என்ஜின்களைவிட மிகவும் எடை குறைவு என்று ரயில்வே ஆணையர் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் வந்தே பாரத் ரயிலில் பசு குறுக்கிட்டால்கூட, ரயில் வேகமாக இயங்குவதால் கடுமையான விபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் கூறுகையில்,

"பசு மாடு முட்டினால்கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம்!

வந்தே பாரத் ரயிலின் முன் கோச், சாதா ரயில்களைவிட எடை குறைவாம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை.

வந்தே பாரத்துக்கு காவி நிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT