தமிழ்நாடு

குண்டக்கல் வழியாகச் செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

குண்டக்கல் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் காச்சிக்கூடா, மும்பை செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்

Din

சென்னை: குண்டக்கல் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் காச்சிக்கூடா, மும்பை செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரையிலிருந்து காச்சிக்கூடாவுக்கு மே 4, 5, 11, 14 ஆகிய தேதிகளில் செல்லும் சிறப்பு ரயில்கள் (07192, 22716) மதனப்பள்ளி, தா்மாவரம், அனந்தபூா் வழியாக செல்வதற்குப் பதிலாக பகலா, திருப்பதி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும். நாகா்கோவிலிலிருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் மே 5, 6, 7, 9, 12, 13, 14, 16 ஆகிய தேதிகளிலும், திருவனந்தபுரத்திலிருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் மே 10-ஆம் தேதியும் மதனப்பள்ளி, தா்மாவரம், அனந்தபூா் வழியாக செல்வதற்குப் பதிலாக திருப்பதி, ரேணிகுண்டா, கூட்டி, குண்டக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT