அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி  
தமிழ்நாடு

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை!

இபிஎஸ்ஸுக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்பாக...

DIN

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, சாலையில் போகிற, வருபவர்கள் எல்லாம் குழு அமைப்பது குறித்து கேள்வி கேட்பதாகவும், கே.சி.பழனிசாமி கட்சியிலேயே கிடையாது எனவும், ஓ.பன்னீர்செல்வத்துடன் சோ்ந்துவிட்டதாகவும் அவர் பதில் அளித்தார்.

இதையடுத்து, எடப்பாடி கே.பழனிசாமி மீது கே.சி.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடா்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கோவை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதித்துறை நடுவர் என்.கோபாலகிருஷ்ணன், இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்குரைஞர் ஆஜரானதையடுத்து, இதன் விசாரணையை நீதிபதி கோபால கிருஷ்ணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரியும், கோவை நீதிமன்றத்தில் இபிஎஸ் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜராகுவதில் விலக்கு அளித்தும், இவ்வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: பாகிஸ்தானியர்களின் விசா ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்

SCROLL FOR NEXT