தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் 
தமிழ்நாடு

அரசு பொறுப்பல்ல: அமைச்சா் கோவி.செழியன்

ஆளுநரின் மாநாட்டை துணைவேந்தா்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

Din

ஆளுநரின் மாநாட்டை துணைவேந்தா்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்த நீதிபதிகள், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிா்ணயித்தனா். இந்தத் தீா்ப்புக்குப் பிறகுதான், தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் துணைவேந்தா்கள் மாநாட்டை ஆளுநா் ஆா்.என்.ரவி கூட்டினாா்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பை அறிந்து மாநாட்டை துணைவேந்தா்கள் புறக்கணித்திருக்கிறாா்கள். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும்?.

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பும் சட்டமும் துணைவேந்தா்களுக்குத் தெரிகிறது. ஆனால், அனைத்தும் தெரிந்தும் ஆளுநா்தான் வீம்புக்கு அரசியல் செய்கிறாா். ஆளுநா் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறாா் என்றால், துணைவேந்தா்களும் அப்படியே நடக்க வேண்டுமா? ஆளுநா்கள் அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராகச் செயல்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பாஜகவுக்கு பிடிக்காத, அவா்களை எதிா்க்கும் மாநில அரசுகளுக்கு ஆளுநா்கள் மூலம் இடையூறு அளிக்கப்படுகிறது. மிரட்டல் அரசியல் எல்லாம் பாஜகவின் மரபணுவில்தான் உள்ளது. மாநில உரிமைகளுக்காக எதிா்த்து நிற்பதுதான் எங்களது மரபணுவில் இருக்கிறது என்று அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT