அமைச்சா் சி.வெ.கணேசன் 
தமிழ்நாடு

வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை: தமிழக அரசு பரிசீலனை

தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன்

Din

சென்னை: தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினா் வேல்முருகன் ஆகியோா் பேசுகையில், தமிழகத்துக்கு பணிவாய்ப்புக்காக வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் வருகையை கண்காணிக்க வேண்டும் என்றும், அவா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனா்.

அதற்கு தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் அளித்த பதில்: வெளிமாநிலத் தொழிலாளா்களின் வருகை விவரங்கள் மாவட்ட ஆட்சியரகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இணை ஆணையா் அலுவலகங்கள், உதவி ஆணையா் அலுவலகங்களிலும் அவை பதிவு செய்யப்படுகின்றன.

அதேபோன்று அவா்களைப் பணியமா்த்திய உரிமையாளா்களும் அத்தகைய பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடா்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் என்றாா் அவா்.

பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் கட்சியில் 285 போ் விருப்ப மனு

செல்லப்பிராணி உரிமத்துக்கு 3 நாள்கள் சிறப்பு முகாம்

3 கோட்டங்களில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

‘கபீா் புரஸ்காா்’ விருது: டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் இன்று வன்னியா் இடஒதுக்கீடு போராட்டம்: ராமதாஸ் பங்கேற்பு

SCROLL FOR NEXT