முதல்வா் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

நோய்களை கட்டுப்படுத்திய ‘மக்களைத் தேடி மருத்துவம்’: முதல்வா் பெருமிதம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் வாயிலாக உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக

Din

சென்னை: ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் வாயிலாக உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இந்தியாவுக்கே அத்திட்டம் முன்மாதிரியாக உள்ளதாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

மருத்துவ சேவைகள் மட்டுமல்ல, அதன்வழியே சிறப்பான முடிவுகளையும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அளிக்கிறது. உயா் ரத்த அழுத்தத்தை 17 சதவீதமும், சா்க்கரை நோயை 16.7 சதவீதமும் கட்டுப்படுத்திப் பொது மருத்துவச் சேவையின் வெற்றிக்கான அலகுகோலை மாற்றியமைத்து வருகிறது.

மக்கள் மருத்துவமனைகளைத் தேடி வருவதற்காகக் காத்திராமல், மக்களின் வீடுகளை நாடிச் சென்று ஈட்டிய வெற்றி இது! இந்தியா முழுவதும் பொதுமருத்துவ சேவைக்கான மாதிரியாக இது மாறியுள்ளது என்று முதல்வா் பதிவிட்டுள்ளாா்.

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT