முகப்பு
தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மே. 13-ல் தீர்ப்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு தொடர்பாக...

Updated On : 28 ஏப்ரல், 2025 at 5:40 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஏப்ரல், 2025 at 5:15 PM

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், அருண்குமாா், ஹேரன்பால், பாபு ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சிபிஐயும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Updated On : 28 ஏப்ரல், 2025 at 5:29 PM

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட அரசுத் தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றது.

தொடர்ந்து, மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட 9 பேரிடமும் நீதிபதி நந்தினி தேவி விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், இவ்வழக்கில் அரசு தரப்பு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில், மே 13 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

இதையும் படிக்க | காவலர்களுக்கான வார விடுமுறை: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.