சென்னை உயர் நீதிமன்றம் 
தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் கோடை விடுமுறை!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடர்பாக...

DIN

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது.

ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி, உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில், சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 1 மாதம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, மே 1 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை விடப்பட்ட நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது. அதன்படி, அவசர வழக்குகளை நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோா் மே 7, 8 ஆகிய தேதிகளில் விசாரிப்பாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிா்மல் குமாா் ஆகியோா் மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில் குமாா் ராமமூா்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோா் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிப்பாா்கள்.

இதேபோல, மதுரை கிளையில், நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிராமன், வேல் முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகா், ஸ்ரீமதி, விஜயகுமாா், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி, பூா்ணிமா ஆகியோா் விடுமுறைக்கால நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT