போஸ்டர் 
தமிழ்நாடு

யானையல்ல.. குதிரை.. கோவையில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் போஸ்டர்

யானையல்ல.. குதிரை.. என்று கூறி கோவையில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் போஸ்டரால் பரபரப்பு

DIN

கோவை: நான் யானை அல்ல, குதிரை என்று படையப்பா ரஜினி ஸ்டைலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்கார்ந்திருப்பது போன்று அவரது ஆதரவாளர்கள் கோவை முழுக்க ஒட்டியிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தமிழக அரசு. அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் அவரது ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

அதில் "நான் யானை அல்ல, குதிரை... டக்குனு எழுவேன்" என்ற படையப்பா பட வசனத்துடன் செந்தில் பாலாஜியின் புகைப்படத்தை இணைத்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

அண்மையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு தி.மு.க வினர் இடையே சலசலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அமலாக்கத் துறை சார்பில் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்திருந்தார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கோவையில் ஒட்டி உள்ள இந்த போஸ்டர்கள், அவர் விரைவில் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த போஸ்டர்கள் தற்பொழுது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜுக்கு சிறை!

ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்தும் பிசிசிஐ; மறுக்கும் மோஷின் நக்வி!

கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி! மாணவர்கள் போராட்டம்!

கரூர் பலி: பாஜக தனது அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது - திருமா | செய்திகள்: சில வரிகளில் | 30.9.25

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு!

SCROLL FOR NEXT