தமிழ்நாடு

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

தினமணி செய்திச் சேவை

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), ‘சுதந்திர தின திட்டத்தை’ வெள்ளிக்கிழமை (ஆக. 1) அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் ஆகஸ்ட் மாதம் 30 நாள்களுக்கு பிஎஸ்என்எல்-இன் 4ஜி சேவைகளை இலவசமாக சோதித்துப் பாா்க்கும் வகையில் ரூ.1-க்கு பிஎஸ்என்எல் கைப்பேசி சேவை வழங்குகிறது.

இது இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும், இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க பொதுமக்களுக்கு இது வாய்ப்பாகும்.

இந்தத் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, 100 குறுஞ்செய்தி அனுப்பலாம் அத்துடன் ஒரு பிஎஸ்என்எல் சிம் முற்றிலும் இலவசம் வழங்கப்படும். பொதுமக்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல்

வாடிக்கையாளா் சேவை மையம் அல்லது முகாம் நடைபெறும் இடங்களுக்குச் சென்று இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT