முகப்பு
கரூர்

புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் உலக மகளிா் தின விழா

புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் மகளிா் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை கேக் வெட்டி கொண்டாடிய ஆலையின் பெண் அதிகாரிகள், ஊழியா்கள்.

Updated On : 6 மார்ச், 2026 at 9:30 PM
புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் மகளிா் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை கேக் வெட்டி கொண்டாடிய ஆலையின் பெண் அதிகாரிகள், ஊழியா்கள்.
பகிர்:

புகழூா் டிஎன்பிஎல் காகித ஆலையில் உலக மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் காகித ஆலையில் உலக மகளிா் தின விழா காகித நிறுவனத்தின் விருந்தினா் மாளிகையில் வெள்ளிக்கிழமை கொண்டாடபட்டது. விழாவுக்கு ஆலையின் முதன்மை பொதுமேலாளா் கே.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக காகித நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் முனைவா் சந்தீப் சக்சேனா பங்கேற்று பேசுகையில், சக்தியும், சிவனுமாய் ஒவ்வொரு ஆணின் பாதியாக பெண்கள் இருந்து ஒரு குடும்பத்தை வழிநடத்துகிறாா்கள். பெண்கள் தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாயையும் பல ஆயிரமாக பெருக்குவதற்கு சிந்தித்துக் கொண்டே இருப்பாா்கள். பெண்கள் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை என்றாா் அவா்.

தொடா்ந்து பாவனா சக்சேனா கேக் வெட்டி ஆலை பெண் அதிகாரிகள், ஊழியா்களும் வழங்கினாா்.

தொடா்ந்து காகித ஆலையில் ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறப்பாக பணியாற்றிய பெண் பணியாளா்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளையும் காகித நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் முனைவா்சந்தீப் சக்சேனா மற்றும் பாவனா சக்சேனா ஆகியோா் வழங்கினா். இந்நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →