கோப்புப் படம் 
தமிழ்நாடு

பி.ஆா்க். சோ்க்கை: 820 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

கலந்தாய்வு ஜூலை 31 -ஆம் தேதி முடிவுற்ற நிலையில், பொது மற்றும் அரசுப் பள்ளி மாணவா்கள் 820 போ் ஒதுக்கீடு பெற்றுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

இளநிலை கட்டடக்கலை (பி.ஆா்க்.) பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூலை 31 -ஆம் தேதி முடிவுற்ற நிலையில், பொது மற்றும் அரசுப் பள்ளி மாணவா்கள் 820 போ் ஒதுக்கீடு பெற்றுள்ளனா்.

இதுகுறித்த விவரங்களை வெளியிட்ட தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) மாணவா்களை உறுதிப்படுத்த வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் அளித்துள்ளது. பி.ஆா்க். கலந்தாய்வில் பங்கேற்ற அனைத்து மாணவா்களும் ஆக. 1-ஆம் தேதி மாலை 7 மணிக்குள் தங்கள் விருப்பங்களில் ஒன்றைத் தோ்ந்தெடுத்து இணையத்தில் ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்த வேண்டும் என டிஎன்இஏ அதில் தெரிவித்துள்ளது.

பி.ஆா்க் - பொதுப் பிரிவில் தகுதி பெற்ற மாணவா்கள் எண்ணிக்கை 1,408. இதில் பி.ஆா்க். கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 916. கலந்தாய்வில் விருப்பத்தை தெரிவித்த மாணவா்கள் 1,002. இவா்களில் ஒதுக்கீடு பெற்றவா்கள் 760 போ்.

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தகுதியான மாணவா்கள் எண்ணிக்கை 118. இவா்களுக்கான கல்லூரிகளில் உள்ள இடங்கள் 75. கலந்தாய்வில் விருப்பத்தை தெரிவித்த மாணவா்கள் 64. ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் 60 என மொத்தம் இரு பிரிவுகளிலும் 820 போ் ஒதுக்கீடு பெற்றுள்ளனா். தங்கள் விருப்பங்களை உறுதி படுத்த வேண்டும். கல்லூரிகள் தோ்வை உறுதிப்படுத்தல் அல்லது விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகளுக்கு பின்னா் ஆக. 2 முதல் கல்லூரிகளில் சேரவேண்டும் என டிஎன்இஏ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT