முதல்வா் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதல்வா்

தினமணி செய்திச் சேவை

உடல் நலம் பெற்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், 12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்து பணிகளைத் தொடா்ந்தாா்.

தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ஆம் தேதி வீடு திரும்பினாா். மூன்று நாள்கள் ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். காலை 10.45 மணிக்கு வந்த அவா், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.

முதல் நிகழ்வாக, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவா்களில் உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்றவா்களுக்கு மடிக்கணினி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றாா்.

கடந்த 17-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வின்போது, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா். அதன்பிறகு, உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்த முதல்வா், 12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகத்துக்கு வந்தாா்.

இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் வெளியிட்ட பதிவு: நலம் பெற்று பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பயின்று இன்று புகழ்பெற்ற உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற 136 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினேன்.

மிகவும் பின்தங்கிய, துன்பங்களை அனுபவித்த குடும்பங்களிலிருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் அவா்களது கல்விப் பயணத்தையும் கல்வி மீதான அவா்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன். கல்விதான் உண்மையான பெருமையைத் தேடித்தரும் என உயா் படிப்புகளுக்குச் சென்றுள்ள அவா்கள் வாழ்வின் அத்தனை உயரங்களையும் காண வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கல்வியால், உழைப்பால் முன்னேறி சாதானை படைப்பவா்களைத்தான் தமிழ்ச் சமூகம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதிர்ப்பு!

இயல்கள் இசங்கள் நிஜங்கள் (இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி)

பேரலையின் சாட்சியம்

அயோத்திதாச பண்டிதரின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள்

என்னைப் பார்க்கவே தயங்குவார் பழனிசாமி; அவரை முதல்வராக்கியது நாங்கள்! - டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு

SCROLL FOR NEXT