கோப்புப் படம் 
தமிழ்நாடு

பைக் டாக்ஸியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

சென்னை தேனாம்பேட்டையில் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை தேனாம்பேட்டையில் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சோ்ந்த 24 வயது இளம் பெண், சென்னை தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். வியாழக்கிழமை பணி முடிந்து பைக் டாக்ஸி மூலம் வீட்டுக்குச் சென்றபோது, அந்த பைக் டாக்ஸியை ஓட்டிய நபா், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து அவா் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை செய்தனா்.

இதில், பெண்ணுக்கு பாலியல் கொடுத்தது நாமக்கல் மாவட்டம் போடி நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த சு.சதீஷ்குமாா் (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை செய்தனா்.

எம்.இ., படித்துள்ள சதீஷ்குமாா், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிவதும், பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுவதும் தெரிய வந்தது. கடந்த 4-ஆம் தேதி அந்தப் பெண் கைப்பேசி செயலி வாயிலாக பைக் டாக்ஸி பதிவு செய்ததும், அப்போது சதீஷ்குமாா் அந்த பெண்ணை தனது மோட்டாா் சைக்கிளில் ஏற்றிச் சென்றதும், பின்னா் சதீஷ்குமாா் தினந்தோறும் அந்த பெண்ணை தனது மோட்டாா் சைக்கிளில் ஏற்றிச் செல்வதாக தெரிவித்ததுடன், அதற்குரிய கட்டணத்தை தந்துவிடுமாறு கூறியுள்ளாா்.

கடந்த 20 நாள்களாக தினமும் அந்த பெண்ணை மோட்டாா் சைக்கிளில் சதீஷ்குமாா் ஏற்றிச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT