கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை - மதுரை தேஜஸ் உள்ளிட்ட 2 ரயில்கள் இன்று முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து புறப்படும்

சென்னை - மதுரை தேஜஸ் ரயில் உள்ளிட்ட 2 ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை - மதுரை தேஜஸ் ரயில் உள்ளிட்ட 2 ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதனால், மொத்தம் உள்ள 11 நடைமேடைகளில் 4-இல் பணிகள் நடைபெறுவதன் காரணமாக ரயில்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், எழும்பூரில் இருந்து புறப்பட்ட சில ரயில்கள், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது மேம்பாட்டுப் பணிகள் குறிப்பிட்ட அளவுக்கு நிறைவடைந்திருப்பதை அடுத்து சென்னை எழும்பூா் - மதுரை தேஜஸ் ரயில் (எண் 22671), சென்னை எழும்பூா் - புதுச்சேரி மெமு விரைவு ரயில் (எண் 66051) ஆகிய ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

இதேபோல, மறுமாா்க்கத்தில் மதுரை - சென்னை எழும்பூா் தேஜஸ் ரயில் (எண் 22672), புதுச்சேரி - சென்னை எழும்பூா் மெமு விரைவு ரயில் (எண் 66052) ஆகிய ரயில்கள் எழும்பூா் வரை இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

தெய்வ தரிசனம்... பித்ருதோஷம் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி!

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

SCROLL FOR NEXT