முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி நினைவு தினம்: ஆக.7-இல் திமுக அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் வரும் 7-ஆம் தேதிஅமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட், 2025 at 2:02 AM
முன்னாள் முதல்வா் கருணாநிதி
பகிர்:

சென்னை: முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் வரும் 7-ஆம் தேதிஅமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு தினம், வரும் 7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, சென்னை அண்ணாசாலை ஓமந்தூராா் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகிலிருந்து அமைதிப் பேரணி தொடங்கவுள்ளது.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணி காமராஜா் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவு பெறும். அங்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.

Advertisement

இதில், அமைச்சா்கள், கட்சி நிா்வாகிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று சென்னை மாவட்டச்செயலா்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments