உதகை தொட்டபெட்டா சிகரம் (கோப்புப் படம்)  
தமிழ்நாடு

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) மூடப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை(ஆக. 5) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலங்கள் இன்று ஒருநாள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிக அளவு மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் விரைந்துள்ளது.

மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035- க்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வாட்ஸ்அப் எண் 9488700588 -க்கும் தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tourist sites have been closed for a day today (Aug. 5) as a red alert has been issued for the Nilgiris district due to heavy rainfall.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் தேங்கிய மழைநீர்! வியாபாரிகள் அவதி!

ஓடிடியில் பறந்து போ!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

ஜானகி.வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா ஓடிடி தேதி!

டிரம்ப் புதிய அறிவிப்பு: சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT