ஒருவர் மட்டுமே வாழும் சிவகங்கை நாட்டாகுடி கிராமம். 
தமிழ்நாடு

ஒருவர் மட்டுமே வாழும் சிவகங்கை நாட்டாகுடி கிராமம்! காரணம் என்ன?

ஒருவர் மட்டுமே வாழும் சிவகங்கை நாட்டாகுடி கிராமம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாதுகாப்பின்மை, தண்ணீர் பஞ்சம் உள்ளிட்ட காரணங்களால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டாகுடி கிராம மக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்வதால், அங்கு ஒருவர் மட்டுமே வாழ்ந்து வருவதாக முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் சுமாா் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்தனர். இந்தக் கிராமத்தில் நீண்ட காலமாக குடிநீர், சுகாதார சேவைகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனால், கிராம மக்களுக்கு தொற்று நோய் பாதிப்பு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. மேலும், வேலைவாய்ப்புகள் இல்லாததாலும் அருகிலுள்ள நகரங்களுக்கு கிராம மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.

மேலும், இந்தக் கிராமத்தில் குடிநீர் பிரச்னை, பேருந்து வசதி, சாலை வசதி இல்லாததால் இங்குள்ள இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வராத காரணத்தினால் இங்கு வாழ்ந்து வந்த மக்கள், நகர் பகுதிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக விவசாயி ஒருவரும், கடந்த மாதம் முதியவர் ஒருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அச்சமடைந்த மக்கள், பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அனைவரும் ஊரைவிட்டு வெளியே செல்கின்றனர்.

இது குறித்து முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “5000 பேர் வாழ்ந்துவந்த நாட்டாகுடி கிராம், தற்போது ஒருவர் மட்டும் வாழும் கிராமமாக மாறியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ. 4,835 கோடிக்கு மேல் வழங்கியுள்ளது, ஆனாலும், குடிநீராக்காக மக்கள் போராடும் நிலை உள்ளது.

நாட்டாகுடி கிராமத்தை உள்ளடக்கிய சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாத்தூர் கிராம பஞ்சாயத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100% குழாய் நீர் இணைப்பை கொடுத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல; துரோகம்.

இது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் நிர்வாக அலட்சியத்தின் வெளிப்படையான அடையாளமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the village of Nattakudi in Sivaganga, where only one person lives...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT