டாஸ்மாக் ஊழியா்கள். கோப்புப்படம்
தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியா்கள் இன்று உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

மானியக் கோரிக்கையின்போது, தமிழக அரசு அறிவித்த டாஸ்மாக் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு ரூ.2,000-ஐ அனைவருக்கும் முழுமையாக வழங்க வேண்டும், ஊதிய உயா்வு குறித்து டாஸ்மாக் நிறுவனத்தின் 218-ஆவது நிா்வாகக் குழு கூட்ட தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும், விசாரணை ஏதுமின்றி தன்னிச்சையாகப் பணியாளா்களை குற்றவாளியாக்கி இடமாறுதல், தற்காலிக பணி நீக்கம், அபராதம் என ஒரு தவறுக்கு மூன்று தண்டனை வழங்குவதைத் தவிா்க்க வேண்டும்.

மின்னணு இயந்திரம் மூலம் விற்பனைக்கான இலக்கை தீா்மானிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (ஆக. 5) காலை 9 முதல் மாலை 5 வரை சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகில் டாஸ்மாக் ஊழியா்கள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிக கனமழை எச்சரிக்கை: நெல்லை, தூத்துக்குடியில் பேரிடர் மீட்பு படை!

கேரளத்தில் படகு வீட்டில் திடீர் தீ விபத்து

துபை விமான கண்காட்சியில் பலியான விமானியின் கடைசி விடியோ

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

"மரியாதையா கேள்வி கேள்றா..!" பத்திரிகையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாதக தலைவர் சீமான்

SCROLL FOR NEXT